இலங்கை
கொரோனா தொற்றுக்கு உள்ளான 119பேர் தலைமறைவு: தீவிர தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படை
கம்பஹா- மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை கொத்தணியில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்ட 119 பேரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாகமேலும் படிக்க...
புலமைப்பரிசில் பரீட்சை ஆரம்பம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியவாறு நடைபெற்று வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றுவருகின்றன. சுகாதார பிரிவினர் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக மாணவர்கள் முகக்கவசம்மேலும் படிக்க...
கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை- பாலித ரங்கே பண்டார
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலையைக் கட்டுப்படுத்திய அரசாங்கம் இரண்டாம் அலையை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்கள் எதனையும் செய்யவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அதன்மேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தைத் தேடி அகழ்வுப் பணி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகள் மறைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தினைத் தேடும் பணிகள் இன்று (சனிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு தேற்றாத்தீவு மயான வீதியில் கடற்கரையினை அண்டியுள்ள சவுக்கு மர காட்டிற்குள்மேலும் படிக்க...
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள இரண்டு மாணவர்களுக்கு கொரோனா
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள இரண்டு மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மூன்று மாணவர்கள் சந்தேகத்தின் பேரில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த ஐவரும் பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் ஐ.டி.எச். வைத்தியசாலை வளாகத்தில் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்மேலும் படிக்க...
கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்றவருக்கும் கொரோனா
மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுடன் கடந்த 29 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கம்பளை உடகல்பாய பிரதேசத்தை சேர்ந்தவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ்மேலும் படிக்க...
இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு – சீனா உறுதி!
இலங்கையின் அபிவிருத்திக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் Yang Jiechi தலைமையிலான தூதுக்குழுவினர், இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடிய போதே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், இரு நாடுகளுக்கும்மேலும் படிக்க...
சீனாவைப் போன்ற வளர்ச்சியை இலங்கைக்கு கொண்டு வருவதே எனது குறிக்கோள் – ஜனாதிபதி
சீனா சிறந்த வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்வதனைப் போன்று இலங்கையையும் கொண்டு வருவதே எனது குறிக்கோள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் பணியகத்தின் உறுப்பினரும்,வெளியுறவு ஆணையத்தின் இயக்குநருமான யாங் ஜீச்சி (Yangமேலும் படிக்க...
கொரோனா அச்சம் – ஆடைத் தொழிற்சாலை குறித்து சுயாதீன விசாரணைகளுக்கு உத்தரவு
மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொள்ளுமாறு நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். முதலாளிமார்கள், தனியார் துறை தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழில் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோருடன் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர்மேலும் படிக்க...
எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது – இராணுவத் தளபதி!
எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஆகையால், எதிர்வரும் 7 நாட்கள் தீர்மானமிக்கது எனமேலும் படிக்க...
நாட்டின் 16 மாவட்டங்களில் பரவியுள்ள கொரோனா வைரஸ் – இராணுவத் தளபதி
நாட்டின் 16 மாவட்டங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர்களுடன் நெருங்கிய தொடர்புகொண்டவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். கம்பஹா – மினுவங்கொடை பிரன்டிக்ஸ் ஆடைத்மேலும் படிக்க...
தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப் பட்ட பத்து நிமிடங்களில் பெண் உயிரிழப்பு!
கொரோனா அறிகுறிகளுடன் கல்கந்த தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் யக்கலவைச் சேர்ந்த 64 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன், குறித்த பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று இருந்ததால் அவருக்கும் வைரஸ் தொற்று இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக கொவிட்-19மேலும் படிக்க...
கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு
மினுவாங்கொடவில் தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை அடுத்து குறித்த தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 04 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இன்று மேலும் 06 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு முடக்கத்துக்குள்!
யாழ்ப்பாணம் புங்குடுதீவுப் பகுதி மக்கள் வெளியேறாதவாறு முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் வசிக்கும் மேலும் 385 இற்கும் மேற்பட்டோர் இன்று சுய தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்றுமுன்தினம் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் ஆயிரத்து 212மேலும் படிக்க...
சிகிச்சைக்கு வர மறுக்கும் கொரோனா தொற்றாளர்கள்!
கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சிலர் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு வைத்தியசாலைகளுக்கு வர மறுப்பு தெரிவிப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தனது அறிக்கையில்… கம்பஹா மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றாளர்கள்மேலும் படிக்க...
பிரபாகரனின் இளைய மகனை இராணுவம் கொலை செய்யவில்லை – சரத் பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் கொலை செய்யவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் குழந்தைப் படையணியின்மேலும் படிக்க...
வவுனியாவிலுள்ள தனியார் கல்வி நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானம்!
வவுனியாவில் இயங்கிவரும் தனியார் கல்லவி நிலையங்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கொரோனா நோய் தாக்கம்மேலும் படிக்க...
மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8000 பேர் தனிமைப் படுத்தலில்!
மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் 80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களைமேலும் படிக்க...
வவுனியாவில் 98 பேருக்கு PCR பரிசோதனை முன்னெடுக்கப் பட்டது!
கம்பஹா மாவட்டத்தில் கொரொனோ வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து,முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் PCR பரிசோதனைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ்பல்கலைக்கழக வவுனியாவளாகத்தில் கல்வி பயின்றுவரும் கம்பஹா மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த 90 பேருக்குமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 312
- 313
- 314
- 315
- 316
- 317
- 318
- …
- 441
- மேலும் படிக்க
