Main Menu

கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்றவருக்கும் கொரோனா

மினுவாங்கொட பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுடன் கடந்த 29 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற ஒருவருக்கும் கொரோனா  வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கம்பளை உடகல்பாய பிரதேசத்தை சேர்ந்தவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் சுகயீனம் காரணமாக நேற்று (வியாழக்கிழமை) இரவு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

கம்பஹாவிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, அவருடன் பணிப்புரிந்த, நெருங்கியவர்கள் என சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தற்போது, நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4488 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 13பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...