கொவிட்-19: பிரான்ஸில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தைக் நெருங்குகிறது!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தைக் நெருங்குகிறது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்றினால், எட்டு இலட்சத்து 97ஆயிரத்து 34பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிகபாதிப்பை எதிர்கொண்ட எட்டாவது நாடாக விளங்கும் பிரான்ஸில், மொத்தமாக 33ஆயிரத்து 477பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 29ஆயிரத்து 837பேர் பாதிக்கப்பட்டனர். 85பேர் உயிரிழந்தனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால், ஏழு இலட்சத்து 58ஆயிரத்து 861பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஆயிரத்து 800பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து நான்காயிரத்து 696பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.