Day: November 28, 2020
யாழில் கொரோனா அச்சநிலை- வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு
யாழில் கொரோனா அச்சநிலை தொடர்பா வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். குறித்த அறிவிப்பில், “கொழும்பில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்த ஒருவர் சுகாதார வைத்திய அதிகாரிக்கு எவ்வித தகவலையும் வழங்காததுடன் சுயதனிமைப்படுத்தலையும்மேலும் படிக்க...
பிடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்தால் வெளியேறுவேன்: ட்ரம்ப் தெரிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடனின் வெற்றியை மக்கள் பிரதிநிதி வாக்காளர்கள் குழு உறுதி செய்து அறிவித்தால், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். ஆனால், ஜோ பிடனின் வெற்றியை அவர்கள் அங்கீகரித்தால், பெரிய தவறுமேலும் படிக்க...
மாவீரர் நாள்: பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் ஒளிர்ந்த கார்த்திகைப் பூ!
தமிழர் உரிமைப் போராட்டத்தில் உயிர்துறந்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கார்த்திகைப் பூ ஒளிரவிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் சிலர் இணைந்து இவ்வாறு கார்த்திகை மலரை ஒளிரவிட்டுள்ளனர். மேலும், ‘சிறீலங்கா அரசை எதிர்கொண்டு விடுதலைக்காக களமாடி வீழ்ந்த மாவீரர்களைமேலும் படிக்க...
கொரோனா தொற்று குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் – உலக சுகாதார மையம்
கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வரும் நாடுகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார மையத்தின் தொழில்நுட்ப தலைவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால், உலக அளவில் இதுவரை 6.08மேலும் படிக்க...
முதல் ரி-20: தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பான வெற்றி!
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலைப் பெற்றுள்ளது. கேப் டவுணில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில்மேலும் படிக்க...
ஸ்வீடன் இளவரசர்- இளவரசிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
ஸ்வீடன் இளவரசர் மற்றும் இளவரசிக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஸ்வீடன் அரச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் கார்ல் பிலிப் மற்றும் இளவரசி சோபியா ஆகியோருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர்கள்மேலும் படிக்க...
பொரிஸ் ஜோன்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை
இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இதன்போது, இந்தியா, இங்கிலாந்து நட்பை அடுத்த பத்தாண்டுகளுக்கு எவ்வாறு முன்னோக்கி கொண்டுச் செல்வது என்பது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கொரோனாவுக்குமேலும் படிக்க...
சிலியில் வன்முறையாக மாறிய போராட்டம்: பலர் காயம்!
சிலியில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர். ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி முறை ஆகியவற்றில் சீர்திருத்தம் கோரி கடந்த ஓராண்டுக்கும் மேலாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைநகர் சாண்டியாகோவில் அரசாங்கத்துக்கு எதிராக கோஷமிட்டுமேலும் படிக்க...
கறுப்பின இசைத் தயாரிப்பாளரை தாக்கிய மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸின் மத்தியப் பகுதியில் கறுப்பின இசைத் தயாரிப்பாளர் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் அடிப்பதாக காட்டும் காணொளி வெளியானதை அடுத்து மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம், பிரான்ஸ் பாதுகாப்புப் படைகளின் நடத்தைமேலும் படிக்க...
தமிழகத்தில் அடுத்த மாத நடுப்பகுதியில் 2000 மினி கிளினிக்குகள் செயற்பாட்டுக்கு வரும் – முதலமைச்சர்
டிசம்பர் 15 ஆம் திகதிக்குள் தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் செயற்பாட்டுக்கு வரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இரண்டு நாட்களே உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் மாவட்டமேலும் படிக்க...
வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் வீதி திருத்தப்பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கெக்கிராவையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறுமேலும் படிக்க...
இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடத்தில் இல்லை- சி.வி.விக்னேஸ்வரன்
நாட்டில் மீண்டும் ஒரு இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நேர்காணலில் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது,மேலும் படிக்க...
விடுதலைப் புலிகளிற்கு வெளிநாடுகளில் நிதி சேகரிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை
விடுதலைப் புலிகளிற்கு வெளிநாடுகளில் நிதி சேகரிப்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இதற்காக இன்டர்போல் மற்றும் சி.ஐ.டி. மற்றும் புலனாய்வு பிரிவினரின் உதவிகளை பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்துமேலும் படிக்க...