Main Menu

சிலியில் வன்முறையாக மாறிய போராட்டம்: பலர் காயம்!

சிலியில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.

ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி முறை ஆகியவற்றில் சீர்திருத்தம் கோரி கடந்த ஓராண்டுக்கும் மேலாக அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தலைநகர் சாண்டியாகோவில் அரசாங்கத்துக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரரர்கள் கற்களையும் குச்சிகளையும் எறிந்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியதோடு, பொதுப் போக்குவரத்து நிறுத்தங்களை தீயிட்டு கொழுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை, கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் பொலிஸார் கூட்டத்தை கலைத்தனர்.

சிலி தலைநகரின் அலமேடா அவென்யூ வழியாக சமூகவலைதளத்தின் ஊடாக வரவழைக்கப்பட்ட சுமார் 10,000 பேர், இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

பகிரவும்...