Day: October 30, 2020
மூன்று ஸ்கிரீனுடன் உருவாகும் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டூயல் ஹின்ஜ் மற்றும் ஸ்லைடிங் கீபோர்டு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் சாம்சங் பல்வேறு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தெரிகிறது. இதில் கேலக்ஸி இசட்மேலும் படிக்க...
2035-ம் ஆண்டு வரை அதிகாரத்தில் இருப்பார் சீன அதிபர் ஜின்பிங்
சீனாவில் ஒரு கட்சி ஆட்சி முறை நடந்து வருகிறது. சீன கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு மாநாடு பீஜிங்கில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் கம்யூனிஸ்டு கட்சியின் 198 மத்தியக்குழு உறுப்பினர்கள், 166 மாற்று உறுப்பினர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் கம்யூனிஸ்டுமேலும் படிக்க...
ரஷிய தடுப்பூசி இந்தியாவில் பரிசோதனை – மேலும் ஒரு நிறுவனம் கைகோர்ப்பு
ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த பரிசோதனை பணியில், மருத்துவ உலகில் முன்னணி நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் கைகோர்த்துள்ளது. இந்தியாவில் நடக்கும் ஸ்புட்னிக்-5 மருத்துவ பரிசோதனைகள் குறித்து அந்த நிறுவனம் ஆலோசனை வழங்கும்.மேலும் படிக்க...
2 வயதில் 12 நிறங்களின் பெயர்களைக் கூறி சாதனை புரிந்த அதிசய குழந்தை – சாதனை சான்றிதழ் பதக்கம்
இரண்டு வயதில் 12 நிறங்களின் பெயர்களைக் கூறி, உலக சாதனை செய்த திருப்பூரைச் சேர்ந்த குழந்தையை கெளரவிக்கும் வகையில், நோபல் உலக சாதனை அமைப்பினர், சாதனை சான்றிதழ் பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். நெருப்பெரிச்சல் பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன், கிருத்திகா தம்பதியினரின்மேலும் படிக்க...
பிரான்ஸ் நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா நோய் தொற்று – நோயாளிகளை ஏற்க முடியாமல் திணறும் மருத்துவமனைகள்
பிரான்ஸ் நாட்டின் அவினான் நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் இடம் இல்லாததால், ராணுவ விமானம் மூலம் பிற நகரங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரான்ஸ் நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அவினான்மேலும் படிக்க...
போலந்து நாட்டில் கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக தொடரும் போராட்டம்
போலந்து நாட்டில் கருக்கலைப்புக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கண்டித்து நடைபெறும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். போலந்து நாட்டில் சட்டம் மற்றும் நீதிக்கட்சி ஆட்சி செய்துவருகிறது. மத அமைப்புக்களுடன் அதிக தொடர்பு வைத்திருக்கும் இக்கட்சி, தேசியவாத கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டுவருகிறது.மேலும் படிக்க...
உலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் நடத்தப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல், உலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் நடைபெறும் தேர்தலாக அமைந்துள்ளது. 103 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் 3-ம் தேதிமேலும் படிக்க...
இயற்கைக்கு எதிராக மனிதர்கள் செய்துவரும் செயல்களால் வருங்காலத்தில் தொற்று நோய்கள் உண்டாகும் – ஐ.நா. எச்சரிக்கை
இயற்கைக்கு எதிரான மனிதனின் செயல்கள், வருங்காலத்தில் பல்வேறு தொற்று நோய்களை உருவாக வழிவகுக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரசால், உலகம் முழுவதும் சுமார் 4 கோடிக்கும் அதிகமானவர்கள்மேலும் படிக்க...
1990 ஆம் ஆண்டு யாழிலிருந்து வெளியேற்றப் பட்டதை நினைவுகூர்ந்த முஸ்லிம் மக்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகளினால் 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதன் 30 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (30) யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது. சுமார் 3 பேர், மிகவும் அமைதியான முறையில் நினைவு தினத்தைமேலும் படிக்க...
யாழ் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்து சேவை இடைநிறுத்தம்!
பருத்தித்துறை – யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 750 இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சேவையில் கரவெட்டி ராஜ கிராமத்தைச் சேர்ந்தவர்களே பெருமளவில் சாரதிகள், நடத்துனர்களாகப் பணியாற்றும்மேலும் படிக்க...
ஜேர்மனியில் ஐந்து இலட்சத்தை நெருங்கும் கொவிட்-19 மொத்த பாதிப்பு!
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்து இலட்சத்தை நெருங்குகிறது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் நான்கு இலட்சத்து 98ஆயிரத்து 353பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 16ஆவது நாடாகமேலும் படிக்க...
பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் 23,065பேர் பாதிப்பு- 280பேர் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 23ஆயிரத்து 065பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 280பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 9ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக ஒன்பது இலட்சத்து 65ஆயிரத்துமேலும் படிக்க...
இஸ்லாமியர்கள் அவர்களின் கோபத்தை காட்ட உரிமை உள்ளது: பிரான்ஸ் தாக்குதல் குறித்து மகாதீர் டுவீட்!
பிரான்ஸில் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், ‘இஸ்லாமியர்கள் அவர்களின் கோபத்தை காட்ட உரிமை உள்ளது’ என மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ‘வரலாற்றில் பல முஸ்லிம்களை கொன்றமேலும் படிக்க...
மாலைத்தீவில் அமெரிக்க தூதரகத்தை அமைக்க அமெரிக்கா தீர்மானம்!
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக மாலைத்தீவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான சுற்றுப்பயணங்களை தொடர்ந்து மாலைத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷகீத்தை சந்தித்து பேச்சுவார்த்தைமேலும் படிக்க...
அமெரிக்காவில் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 91ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு
அமெரிக்காவில் கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 91ஆயிரத்து 530பேர் பாதிக்கப்பட்டதோடு, ஆயிரத்து 47பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்புமேலும் படிக்க...
செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்ட படகு விபத்து: 140பேர் உயிரிழப்பு!
செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு புறப்பட்ட படகொன்று விபத்துக்குள்ளானதில், 140பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. எம்பூரிலிருந்து சுமார் 200 பயணிகள் பயணித்த குறித்த படகு நகரத்தை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே தீப்பிடித்து கவிழ்ந்தது என்று சர்வதேச இடம்பெயர்வு அமைப்புமேலும் படிக்க...
மைக் பொம்பியோவின் கருத்திற்கு பதிலளித்தார் சவேந்திர சில்வா
அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் மைக் பொம்பியோ இலங்கையில் வைத்து விடுத்த அறிவிப்பு நடைமுறைக்குவரும் என நம்புவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் கடந்த 28ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்றார். இதன்போதுமேலும் படிக்க...
பயங்கரவாத சம்பவங்கள் எதிரொலி: பிரான்ஸில் பாதுகாப்பு அவசரநிலை பிரகடனம்!
பிரான்ஸில் அண்மைக்காலமாக பதிவாகிவரும் பயங்கரவாத சம்பவங்களை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வழிபாட்டுத்தளங்கள், பாடசாலைகள், பொது இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நலன்கருதி நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் இரு மடங்காக குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக மூவாயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில்மேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்..!
தமிழகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை வட்டாரபோக்குவரத்து பத்திரபதிவு துறைகளில் தினந்தோறும் தீபாவளி தான் இங்குதான் பணம் பாதாளம் வரைக்கு பாயுகிறது. இது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. லஞ்ச ஒழிப்புமேலும் படிக்க...
பிரபல கல்வி நிறுவனத்தில் ரூ.5 கோடி ரொக்கம்… ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல்..!
ஈரோட்டில் நந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம், ரூ. 150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள 22 இடங்களில் நேற்றுமேலும் படிக்க...