Main Menu

உலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் நடத்தப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்‍காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல், உலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் நடைபெறும் தேர்தலாக அமைந்துள்ளது. 103 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் 3-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியில் உள்ளனர். இந்நிலையில், உலக வரலாற்றிலேயே மிக அதிக செலவில் நடைபெறும் தேர்தலாக இது அமைந்துள்ளது. இந்த தேர்தலுக்கு 80 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என கணிக்‍கப்பட்டதாகவும், ஆனால் தற்போது, 103 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என்று தெரியவந்துள்ளதாகவும், அமெரிக்க தேர்தல் ஆய்வு அமைப்பான Center for Responsive Politics, அறிக்‍கை வெளியிட்டுள்ளது. கடந்த, 2016-ம் ஆண்டு அமெரிக்‍க தேர்தல் செலவை விட இது இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்‍கது.

பகிரவும்...