Main Menu

பயங்கரவாத சம்பவங்கள் எதிரொலி: பிரான்ஸில் பாதுகாப்பு அவசரநிலை பிரகடனம்!

பிரான்ஸில் அண்மைக்காலமாக பதிவாகிவரும் பயங்கரவாத சம்பவங்களை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வழிபாட்டுத்தளங்கள், பாடசாலைகள், பொது இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்பு நலன்கருதி நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் இரு மடங்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக மூவாயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை ஏழாயிரம் வீரர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அதிநவீன ஆயுதம் ஏந்தி பாதுகாப்பு படையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறனர். மேலும், அந்நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு ஆதரவாக குழுக்களை குறிவைத்து தீவிர தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

இதேவேளை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாடு முழுவதும் 1 மாத காலத்துக்கு (நவம்பர் இறுதிவரை) ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மது விடுதிகள், உணவு விடுதிகள், ஹோட்டல்கள், உணவு பொருட்கள் தவிர்த்த பிற பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மூடப்படுகின்றன. பொதுமக்கள் கூடுகை தடை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பிற பிராந்தியங்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...