Day: March 19, 2020
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அறிவிப்புக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு!
டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடர் விவகாரத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் முடிவுக்கு எதிராக, ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்குமாறு உலகநாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும்,மேலும் படிக்க...
கொரோனா வைரஸின் பிறப்பிடத்தில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப் பட்டுள்ளது: சீனா தகவல்!
கொரோனா வைரஸின் பிறப்பிடமாக மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஹூபே மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்துமேலும் படிக்க...
40 ஆண்டுகால தடை சட்டம் நீக்கம்: நியூஸிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றமல்ல!
நியூஸிலாந்தில் குற்றமாகக் கருதப்படும் ஒரே மருத்துவ முறையாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக விளங்கிவந்த கருக்கலைப்பு தடை சட்டம், நீக்கப்பட்டுள்ளது. கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குள் பெண்ணொருவர் தனது கருவை கலைப்பதற்கான உரிமையை வழங்கும் சட்டமூலம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தமேலும் படிக்க...
இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா!
இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. கடந்தமேலும் படிக்க...
பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் விபரம் வெளியானது- சுரேன் ராகவனுக்கு வாய்ப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட உள்ளவர்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைசார் நிபுணர்கள், தொழிற்துறையினர், சமூக ஆய்வாளர்கள் என்ற அடிப்படையில் 29 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.மேலும் படிக்க...
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் வெளியானது!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசியப் பட்டியல் மூலம் தெரிவுசெய்யப்பட உள்ளவர்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 29 பேரின் பெயர்க்ள அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய ஜோன் அமரதுங்க, ஆசு மாரசிங்க, சமன்ரத்னபிரிய, கருணாசேன கொடிதுவகு, ஜனாதிபதி சட்டத்தரணி திலக்மேலும் படிக்க...
அமெரிக்காவில் போர்க்கால அதிகாரங்களை வழங்கும் சட்டம் அமுலுக்கு வருகிறது?
கொரோனாவை எதிர்கொள்ள போர்க்கால அதிகாரங்களை வழங்கும் சட்டத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில், 9 ஆயிரத்து 464 பேருக்கு கொரானா தொற்றியுள்ளதுடன் இதுவரை அங்கு 155 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதனை எதிர்கொள்ள முகக் கவசங்கள்,மேலும் படிக்க...
மட்டக்களப்பு நகரில் பாரிய தீ விபத்து: பல கடைகள் தீக்கிரை!
மட்டக்களப்பு, கல்லடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று மாலை ஏற்பட்ட தீ காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. கல்லடி மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள ஹாட்வெயார் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள்மேலும் படிக்க...
கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் கொரோனா வைரசினால் 89 பேர் உயிரிழப்பு!
நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசினால் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அளவிலானவர்கள் உயிரிழப்பது இதுவே பிரான்சில் முதன் முறை. கடந்த 24 மானிநேரத்தில் பிரான்சில் 912 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து கொரோனா வைரசினால்மேலும் படிக்க...
சீனாவில் இருந்து பிரான்சுக்கு ஒரு மில்லியன் முகக் கவசங்கள் அனுப்பி வைப்பு
சீனாவில் இருந்து பிரான்சுக்கு ஒரு மில்லியன் முகக்கவசங்கள் கொண்டுவரப்படவுள்ளன. செவ்வாய்க்கிழமை நண்பகலில் இருந்து நாடு முழுவதும் மருந்தகங்களில் முகக்கவசங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் திங்கட்கிழமை இரவு அறிவித்திருந்தார். ஆனால் செவ்வாய்க்கிழமை மற்றும் இன்று புதன்கிழமை முகக்கவசங்களுக்கு பலத்த தட்டுப்பாடுமேலும் படிக்க...
கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையில் 100 வீத வெற்றி! : சீன வைத்தியர்கள் தெரிவிப்பு
ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிவரும் கொரோனா தொற்றின் கோரத்தாண்டவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வைத்தியர்கள், நிபுணர்கள், விஞ்ஞானிகள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா சீனாவின் வுஹான் நகரிலுள்ள ஆய்வுகூடமொன்றில் சீன வைத்தியர்கள் அடங்கி குழுவொன்றினால் இக்கொடிய நோய்க்கெதிராக கண்டுபிடிக்கப்பட்ட “ஸ்டெம்மேலும் படிக்க...
வெளி நாட்டவர்களிற்கு தடை விதித்தது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவிற்குள் வெளிநாட்டவர்களும் அவுஸ்திரேலிய பிரஜைகள் அல்லாதவர்களும் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக பிரதமர் ஸ்கொட்மொறிசன் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை முதல் இந்த தடை நடைமுறைக்கு வரவுள்ளது. அவுஸ்திரேலியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 80 வீதமானவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுடன் தொடர்புகொண்டவர்களாவோ அல்லது வெளிநாட்டவர்களுடன் நேரடி தொடர்பினை வைத்திருந்தவர்களோவோ காணப்படுகின்றனர்மேலும் படிக்க...
COVID-19 கிருமிப் பரவல்: அமெரிக்க – கனடா எல்லையை மூட இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம்
அமெரிக்க – கனடா எல்லையை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடுவதன் தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர். COVID -19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அத்தகைய நடவடிக்கையை நடைமுறைப்படுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும்மேலும் படிக்க...
ஆஸ்திரேலியா விற்குள் வெளி நாட்டினர் செல்லத் தடை!
ஆஸ்திரேலியாவில் COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு வெளிநாட்டினர் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய குடிமக்கள் அல்லாதோர், ஆஸ்திரேலியாவில் குடியிருக்காதோர் நாளை இரவு 9 மணி முதல் ஆஸ்திரேலியாவிற்கு முடியாது என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் (Scott Morrison)மேலும் படிக்க...
COVID-19 : IKEA நிறுவனம் அமெரிக்காவில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூடுகிறது
அமெரிக்காவில் COVID-19 கிருமித்தொற்று அதிகரித்து வரும் நிலையில் IKEA நிறுவனம் அங்குள்ள அதன் அனைத்துக் கடைகளையும் தற்காலிமாக மூடுகிறது. அறைகலன்களைத் தயாரிக்கும் IKEA நிறுவனம் அமெரிக்காவில் 50 கடைகளை வைத்துள்ளது. அமெரிக்கா அந்நிறுவனத்தின் இரண்டாவது பெரிய சந்தை. அத்துடன் நெதர்லந்து, பெல்ஜியம்,மேலும் படிக்க...