Main Menu

சீனாவில் இருந்து பிரான்சுக்கு ஒரு மில்லியன் முகக் கவசங்கள் அனுப்பி வைப்பு

சீனாவில் இருந்து பிரான்சுக்கு ஒரு மில்லியன் முகக்கவசங்கள் கொண்டுவரப்படவுள்ளன.  செவ்வாய்க்கிழமை நண்பகலில் இருந்து நாடு முழுவதும் மருந்தகங்களில் முகக்கவசங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் திங்கட்கிழமை இரவு அறிவித்திருந்தார்.

ஆனால் செவ்வாய்க்கிழமை மற்றும் இன்று புதன்கிழமை முகக்கவசங்களுக்கு பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முகக்கவசங்கள் விற்பனைக்கு இல்லை என பல கடைகளில் பதாகை மாட்டப்பட்டுள்ளது காணக்கூடியதாக உள்ளது. பொதுமக்கள் பலர் இது தொடர்பாக விசனப்பட்டிருந்தனர்.  

இந்நிலையில், சீனாவில் இருந்து பிரான்சுக்கு ஒரு மில்லியன் முகக்கவசங்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  சீனாவில் இருந்து புறப்பட்ட குறித்த விமானம் தற்போது பெல்ஜியத்தில் தரையிறங்கியுள்ளது.

பெல்ஜியத்தின் Liege விமான நிலையத்தில் இருந்து இன்று இரவு பிரான்சுக்கு இந்த முகக்கவசங்கள் கொண்டுவரப்பட உள்ளதாக அறிய முடிகிறது.  குறித்த முகக்கவசங்களை சீனாவின் இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் பிரான்சுக்கு வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பகிரவும்...