Main Menu

அமெரிக்காவில் போர்க்கால அதிகாரங்களை வழங்கும் சட்டம் அமுலுக்கு வருகிறது?

கொரோனாவை எதிர்கொள்ள போர்க்கால அதிகாரங்களை வழங்கும் சட்டத்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில், 9 ஆயிரத்து 464 பேருக்கு கொரானா தொற்றியுள்ளதுடன் இதுவரை அங்கு 155 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதனை எதிர்கொள்ள முகக் கவசங்கள், கருவிகள் மற்றும் பொருட்களின் உற்பத்தி, விநியோகத்தை நேரடியாக அதிகரிக்க ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இதற்கான உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக, பாதுகாப்பு கொள்முதல் சட்டத்தைப் பயன்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும்-சோவியத் ரஷ்யாவுக்கும் பனிப்போர் நிலவிய காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம், அரசுக்கு போர்க்கால அதிகாரங்களை வழங்குகிறது. இதை அரசு பயன்படுத்த வேண்டும்.

ஏற்கெனவே பல அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை வலியுறுத்திவந்த நிலையில், ட்ரம்ப் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பகிரவும்...