Main Menu

COVID-19 கிருமிப் பரவல்: அமெரிக்க – கனடா எல்லையை மூட இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம்

அமெரிக்க – கனடா எல்லையை அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு மூடுவதன் தொடர்பில் இரு நாட்டுத் தலைவர்களும் இணக்கம் கண்டுள்ளனர்.

COVID -19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அத்தகைய நடவடிக்கையை நடைமுறைப்படுத்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும், கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இணங்கியுள்ளனர்.

இருநாடுகளும் ஏற்கனவே பல்வேறு பயணத் தடைகளை அறிவித்துள்ள போதிலும், அந்த இருநாடுகளுக்கு இடையே அறிவிக்கப்பட்டுள்ள முதல் பயணத் தடை அதுவாகும்.

கனடா தனது 75 விழுக்காட்டு ஏற்றுமதிக்கு அமெரிக்காவைச் சார்ந்துள்ளது.

கனடாவுடனான வடக்கு எல்லைப் பகுதி தற்காலிமாக மூடப்படும். அதனால், வர்த்தகம் பாதிக்கப்படாது என்று அதிபர் டிரம்ப் Twitter இல் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...