Main Menu

கொரோனா வைரஸின் பிறப்பிடத்தில் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப் பட்டுள்ளது: சீனா தகவல்!

கொரோனா வைரஸின் பிறப்பிடமாக மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஹூபே மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று அந்த மாகாண சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒருவருக்கு மட்டும் புதிதாக வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதாகவும், 11 பேர் வைரஸால் உயிரிழந்தாகவும் சுகாதாரத் துறை கூறியுள்ளது.

ஆரம்பத்தில் சீனாவில் மட்டுமே பரவத்தொடங்கிய இந்த வைரஸ், தற்போது உலகின் 150இற்க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.

சீனாவில் பெரும் அளவில் உயிரிழப்பை ஏற்படுத்திவந்த இந்த வைரஸால், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ஹூபே மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளனர்.

ஆனால் தற்போது சீனா பல்வேறு கட்டுப்பாடுகளையும், சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொண்டதையடுத்து சீனாவீல் 80 சதவீதம் வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...