Day: December 24, 2019
தமிழ் அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு – விமான நிறுவனம் பெருமிதம்
விமானத்தில் தமிழில் அறிவிப்புச் செய்ததற்குப் பயணிகளிடையே நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக சிங்கப்பூரின் ஸ்கூட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் விமானமான ஸ்கூட்டில் விமானியாக பணிபுரியும் சரவணன் அய்யாவு அண்மையில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்தார். இந்தமேலும் படிக்க...
வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
முப்படைகளின் தலைமைத் தளபதியை நியமிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. மேலும், அஜித் தோவல் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளையும் ஏற்பதென இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இராணுவ விவகாரங்களுக்கான துறை அமைக்கப்பட்டு அதன் தலைவராகவும்மேலும் படிக்க...
குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் முதல் மனுத் தாக்கல்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்பும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்மேலும் படிக்க...
பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் : சஜித்
அரசியல் பழிவாங்கல்களைப் புறந்தள்ளி நாட்டிற்கும், மக்களுக்கும் சேவையாற்றுவதற்கான தேவைப்பாடொன்று எழுந்துள்ளது. நாட்டில் நீதி, நேர்மை, அபிவிருத்தி ஆகியவற்றை செயற்படுத்தக்கூடிய வாய்ப்பிருந்தும் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அதேவேளை அதிகாரத்தை நிலைநிறுத்திக்மேலும் படிக்க...
விடுதலைப் போர் மௌனித்த பின்னர் தமிழர்களை ஆத்திரமூட்ட வேண்டாம் – எம்.கே.சிவாஜிலிங்கம்
விடுதலைப் போர் மௌனித்த பின்னர் தமிழர்களை ஆத்திரமூட்ட வேண்டாம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், “நீங்கள் வாள் எடுத்தால், நாங்கள் சங்கிலிய மன்னன் மற்றும் எல்லாள மன்னனின் கேடயங்களைத் தூக்குவோம். மீண்டும் போருக்கு எம்மைமேலும் படிக்க...
யாழில் மிக உயரமான கிறிஸ்மஸ் மரம் திறந்துவைப்பு
யாழ்ப்பாணம், உரும்பிராய் புனித மிக்கேல் தேவாலயத்தில் அமைக்கப்பட்டுள் 85 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் இன்று இரவு திறந்து வைக்கப்பட்டுள்ளது. வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரத்தை புனித மிக்கேல் தேவாலயத்தின் பங்குத்தெந்தை அருட்பனி ம.பத்திநாதர் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.மேலும் படிக்க...
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் அமர்வுகளில் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், அடுத்த சிலமேலும் படிக்க...
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் 32-வது ஆண்டு நினைவு நாள்
அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர். அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினாமேலும் படிக்க...
பிரான்ஸ் போராட்டம்: எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு!
பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கிற்கு 8 மில்லியன் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுவடைந்துவரும் இந்த போராட்டத்தினால், எல் ஓபரா டி பரிஸ் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தோடு,மேலும் படிக்க...
கிறிஸ்மஸ்சையும் பொருட்படுத்தாது தொடரும் போராட்டம்: இருபதாவது நாளாகவும் போக்குவரத்து முடக்கம்!
பிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், இருபதாவது நாளாக இன்றும் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன. கடந்த 5ஆம் திகதி பிரான்ஸில் முன்னெடுக்கப்பட்ட போரட்டத்தினால், நாடே ஸ்தம்பித்துப் போயிருந்தது. இதனால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் கத்திக் குத்துத் தாக்குதலில் இரு பெண்கள் உயிரிழப்பு!
பிரித்தானியா – சஸெக்ஸில் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவமானது சஸெக்ஸின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிரவ்லி டவுன் என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்துமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 24 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவின் பாலம்பேங் பகுதியில், பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 13 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா மாகாண தலைநகர் பாலம்பேங் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இரவுமேலும் படிக்க...
FATF இன் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான்: 150 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு காலக்கெடு
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவது தொடர்பாக பாகிஸ்தானுக்கு நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு 150 கேள்விகளை எழுப்பியுள்ளது. பிரான்சின் பரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும், FATF என்ற நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு, சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிக்கப்படுவதைமேலும் படிக்க...
ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு கிடைத்த வெற்றி – மம்தா
ஜார்கண்ட் தேர்தல் வெற்றியானது தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் வெற்றி என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ்மேலும் படிக்க...
இந்தியாவில் பொருளாதார தேக்க நிலை: எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்
இந்தியா குறிப்பிடத்தகுந்த பொருளாதார தேக்க நிலைகளுக்கு இடையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப ஆண்டுகளின் வளர்ச்சியில் அதற்குத் தகுந்த முறைசார் தொழில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை எனவும் உழைப்புச் சந்தை பங்கேற்பும் பெரிய அளவில் சரிவு கண்டுள்ளதுமேலும் படிக்க...
டெங்கு காய்ச்சலுக்கு பரிதாமாகப் பலியான முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்
டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.தற்போது பளைப் பிரதேச செயலக உத்தியோகத்தராக கடமையாற்றி வந்தவரும், வலி.மேற்குப் பிரதேச செயலக முன்னாள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான யாழ் மூளாயைச் சேர்ந்த சுகன்யா விசாகரட்ணம் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.மேலும் படிக்க...
43 வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயாராகும் ரணில்?
43 வருட அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளிவைக்க தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அந்தவகையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், இந்த தீர்மானம் எடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மாலிகாகந்த மகாபோதிமேலும் படிக்க...
ஆழிப்பேரலையின் 15ஆவது ஆண்டு நினைவு தினம் – வவுனியாவில் விசேட பிரார்த்தனைக்கு அழைப்பு
சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் 15ஆம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு நாளை மறுதினம் விசேட வழிபாடு வவுனியாவில் நடைபெறவுள்ளது. குறித்த விசேட வழிபாடு மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாகமேலும் படிக்க...