Main Menu

FATF இன் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான்: 150 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு காலக்கெடு

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி வழங்குவது தொடர்பாக பாகிஸ்தானுக்கு நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு 150 கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரான்சின் பரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும், FATF என்ற நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு, சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு நிதி உதவி அளிக்கப்படுவதை கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பின் கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் உள்ளது.

இந்தப் பட்டியலில் இருந்து விடுபட, ஏற்கனவே 27 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதில் 22 நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. வரும் 2020 பெப்ரவரிக்குள் இவற்றை நிறைவேற்றாவிட்டால் கறுப்புப் பட்டியலில் பாகிஸ்தான் சேர்க்கப்படும்.

இந்த நிலையில், இந்த 22 நிபந்தனைகளை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை பாகிஸ்தான் சமீபத்தில் தாக்கல் செய்தது.

ஆனால், அதில் திருப்தி அடையாத நிதி நடவடிக்கை கண்காணிப்பு அமைப்பு, பாகிஸ்தானிடம் 150 கேள்விகளை கேட்டுள்ளதுடன் அதற்கு ஜனவரி 8 ஆம் திகதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

பகிரவும்...