Main Menu

குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் முதல் மனுத் தாக்கல்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தவறான தகவல்களைப் பரப்பும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் மனு இதுவாகும்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தச் சட்டத்தில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பாரஸிகர்கள், பௌத்தர்கள் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் திகதிக்குள் எந்தவிதமான ஆவணங்களும் இல்லாமல் இந்த 6 மதத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தாலும் குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், மக்களோடு இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றன. ஆனால் இந்தச் சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்று பா.ஜ.க. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி 60-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இதனிடையே மும்பையைச் சேர்ந்த புனீத் கவுர் தண்டா என்பவர் சார்பில் வழக்கறிஞர் வினீத் தண்டா உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

பகிரவும்...