Main Menu

ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு கிடைத்த வெற்றி – மம்தா

ஜார்கண்ட் தேர்தல் வெற்றியானது தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் வெற்றி என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து தனது ருவிட்டர் பக்கத்திலேயே மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வெற்றி பெற்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வெற்றியானது தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது கிடைத்துள்ளது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி’ என பதிவிட்டுள்ளார்.

பகிரவும்...