Day: August 9, 2019
ஒக்ரோபர் 31 ல் பிரித்தானியா வெளியேற வேண்டும் : பிரதமர்

பிரெக்ஸிற் குறித்து 2016 ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளித்து ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு வெற்றிபெற்றால் ராஜினாமாச் செய்வீர்களா என்ற கேள்விக்கு நேற்றுமேலும் படிக்க...
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: எதிர்பார்ப்பு மிக்க இலங்கை அணி அறிவிப்பு!

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கெதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான, 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கு முன்னதாக 22 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இறுதி 15 பேர் கொண்ட அணிமேலும் படிக்க...
பிரேஸில் வீரர் கேப்ரியல் ஜீசசுக்கு 2 மாதங்கள் கால்பந்து போட்டிகளில் விளையாட தடை!

பிரேஸில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான கேப்ரியல் ஜீசசுக்கு 2 மாதங்கள், கால்பந்து போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் அத்துமீறி செயற்பட்ட காரணத்தினாலேயே, அவருக்கு தென்அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு இந்த தடையை விதித்துள்ளது. பிரேஸிலில் கடந்த மாதம் நடந்த கோபாமேலும் படிக்க...
பிரான்ஸ் சினிமாவின் பிரபல இயக்குனர் காலமானார்

பிரான்ஸ் சினிமா உலகின் பிரபல இயக்குனர் ஜீன்-பியர் மோக்கி தனது 86 ஆவது வயதில் காலமானார். ஜீன்-பியர் மோக்கி உடல்நலக்குறைவு காரணமாக தனது இல்லத்தில் உயிரிழந்ததாக அவரது மகன் ஸ்ரனிஸ்லஸ் நோர்டி நேற்று (வியாழக்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளார். ஜீன்-பியர் மோக்கி ஒரு இயக்குனராகமேலும் படிக்க...
சக்திவாய்ந்த சூறாவளி தாக்கவுள்ளது – சீனாவில் சிவப்பு எச்சரிக்கை

கிழக்கு கடற்கரை நோக்கி ஒரு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கவுள்ளதாக சீன அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். தற்போது தாய்வானில் 190 மணிக்கு கிமீ (120 மைல்) வேகத்தில் வீசும் லெக்கிமா சூறாவளி நாளை (சனிக்கிழமை) சீனாவின் ஜெஜியாங் மாகாணத்த்தை தாக்கும் எனமேலும் படிக்க...
ஊழல் குற்றச்சாட்டு – கிர்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி கைது

ஊழல் மற்றும் பதவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கிர்கிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி அல்மாஸ்பெக் அடம்பயேவ் பாதுகாப்புப் படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியை சட்டத்தின் முன் நிறுத்தும் நோக்கில் அவரை கைது செய்யும் நடவடிக்கை நேற்றுமேலும் படிக்க...
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியையும் கைப்பற்றியது தி.மு.க.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தின் வெற்றி உறுதியானது. இதன்படி 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார். இதனிடையே ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் பணி இடம்பெற்று வருவதனால் இறுதி முடிவு மாலை 4.30 மணிக்குமேலும் படிக்க...
மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டது – வேலூர் வெற்றி குறித்து ஸ்டாலின்

மத்திய, மாநில அரசுகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வேலூர் தொகுதியானது தி.மு.க.வின் கோட்டையாகி இருக்கிறது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளதையடுத்து ஊடகங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் படிக்க...
மற்றுமொரு பிரபாகரன் உருவாவதை தென்னிலங்கை தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் – சுமந்திரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போல மற்றுமொரு தலைவர், தமிழர்கள் மத்தியில் இருந்து உருவாகுவாரா இல்லையா என்பதை தென்னிலங்கை அரசியல் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டில் பல தலைவர்கள் உருவாகுவதற்குக் காரணமாகவிருந்தமேலும் படிக்க...
தமிழர்களின் ஆதரவு தேவையில்லையென நான் கூறவில்லை

இலங்கை வாழ் அனைத்து தமிழர்கள் மற்றும் சிங்களவர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்டமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழு- ஆளுநர் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட நிபுணர்கள் குழுவிற்கும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு (09) இன்று முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இலங்கையில் எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று வருமானால் அதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்களை இலங்கை அரசாங்கம் அழைத்தால் அவர்கள்மேலும் படிக்க...
தேர்தலில் களமிறங்குவதற்கு சிறந்த அணியை உருவாக்குவதே எமது நோக்கம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு சிறந்த அணியொன்றை உருவாக்குவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்மேலும் படிக்க...
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் இல்லை – பாகிஸ்தான்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ராணுவ நடவடிக்கை எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றுமேலும் படிக்க...
வேலூரில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு- ஏ.சி.சண்முகம் முன்னிலை

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். வேலூர் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகம், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில்மேலும் படிக்க...
பாகிஸ்தானின் வைத்தியர்களை வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவு

சவுதி அரேபியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் வைத்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தானில்மேலும் படிக்க...
புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோவே காரணம்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோதான் காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக போர் நின்றுவிடும், நல்லது நடக்கும் என தவறான தகவல்களை பிரபாகரனிடம் வைகோ அளித்து வந்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகமேலும் படிக்க...
”முஸ்லிம் மாணவிகளின் பர்தா தடை விதிப்பு அகற்றப்பட வேண்டும்”

நாடளாவிய ரீதியில் தற்போது க.பொ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெற்று வருகின்ற நிலையில், பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகள் பரீட்சை நிலையங்களில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றமை தொடர்பில், கல்வி அதிகாரிகள் ஊடாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தின் கவனத்துக்குக் கொண்டுமேலும் படிக்க...
தற்போதைய அரசு சர்வதேசத்துடன் இணைந்தே என்னை தோற்கடித்தது – மஹிந்த

சர்வதேச சக்திகளுடன் ஒன்றிணைந்து 2015ஆம் ஆண்டு என்னை தோல்வியடையச் செய்த தற்போதைய அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம் பெற்ற தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணைமேலும் படிக்க...