Main Menu

சக்திவாய்ந்த சூறாவளி தாக்கவுள்ளது – சீனாவில் சிவப்பு எச்சரிக்கை

கிழக்கு கடற்கரை நோக்கி ஒரு சக்திவாய்ந்த சூறாவளி தாக்கவுள்ளதாக சீன அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

தற்போது தாய்வானில் 190 மணிக்கு கிமீ (120 மைல்) வேகத்தில் வீசும் லெக்கிமா சூறாவளி நாளை (சனிக்கிழமை) சீனாவின் ஜெஜியாங் மாகாணத்த்தை தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு அவசரகால குழுவினர் அனுப்பப்பட்டுள்ளதாக சீனாவின் அவசரகால அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஷாங்காயில் கரையோர பகுதிகளில் உள்ள மேலும் ஆயிரக்கணக்கான மக்களையும் அவ்விடங்களை விட்டு வெளியேறுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் யாங்சே நதி மற்றும் மஞ்சள் நதியின் கிழக்கு பகுதிகளுக்கு எதிர்வரும் புதன்கிழமை வரை வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஜியாங்சு மற்றும் ஷாண்டோங் மாகாணங்களும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...