Main Menu

பாகிஸ்தானின் வைத்தியர்களை வெளியேறுமாறு சவுதி அரேபியா உத்தரவு

சவுதி அரேபியாவில் பணியாற்றும் பாகிஸ்தான் வைத்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், பாகிஸ்தானில் எம்.எஸ். மற்றும் எம்.டி. போன்ற முதுகலை மருத்துவப்படிப்பின் தரம் மற்றும் பயிற்சி சிறப்பானதாக இல்லை என கூறி அதன் அங்கீகாரத்தை சவுதி அரேபியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பாக சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானின் முதுகலை மருத்துவ மேற்படிப்பு, சவுதி அரசின் சுகாதார ஆணையத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்புடையதாக அல்ல என்பதால் அங்கு எம்.எஸ்., எம்.டி படித்துமுடித்தபின் சவுதியில் பணியாற்றுபவர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சவுதி அரேபியாவின் இந்த முடிவு நூற்றுக்கணக்கான வைத்தியர்களை வேலையிழக்க செய்துள்ளது.  இதனையடுத்து சுகாதார சிறப்புகளுக்கான சவுதி ஆணையம் அங்குள்ள பாகிஸ்தான் வைத்தியர்களுக்கு பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான கடிதங்களை அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

பகிரவும்...