Main Menu

புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோவே காரணம்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்ததற்கு வைகோதான் காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.  குறிப்பாக போர் நின்றுவிடும், நல்லது நடக்கும் என தவறான தகவல்களை பிரபாகரனிடம் வைகோ அளித்து வந்தார். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் செயல்பட்டது அனைவருக்கும் தெரியும். ஈழத் தமிழர்கள் நன்றாக வாழ வேண்டும் என கொள்கை அமைத்து கொடுத்தது காங்கிரஸ் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை காஷ்மீர் விவகாரத்தில் முதல் குற்றவாளி காங்கிரஸ்தான் என மாநிலங்களவயில் நடந்த விவாதத்தில் வைகோ குற்றம்சாட்டியிருந்தார். இதை காங்கிரஸ் கட்சி கண்டித்தது. வைகோவை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் வைகோ அரசியல் நாகரீகமற்றவர். யாருக்கும் விசுவாசமாக இருந்ததில்லை என கூறியிருந்தார். இதற்கு பதிலடியாக வைகோ பேசுகையில் இனத்தை அழித்த பாவிகளின் தயவில் தான் நாடாளுமன்ற உறுப்பினராகவில்லை, தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக திமுக எம்எல்ஏக்களும் ஸ்டாலினும்தான் என கடுமையாக தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் கே எஸ் அழகிரி கூறுகையில் காங்கிரஸ் தயவால் நாடாளுமன்ற உறுப்பினரானார் என ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் தெரிவித்தார். தான் பேசவில்லை.

தாங்கள் வைகோவை நிறுத்தக் கூடாது என கூறியிருந்தால் ஸ்டாலின் நிச்சயம் அவருக்கு இடம் வழங்கியிருக்க மாட்டார். வைகோவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுக்க காங்கிரஸ் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.

முதலில் மாநிலங்களவையில் காஷ்மீர் குறித்த விவாதத்தின் மீது பேசுவதற்கு வைகோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் குறித்து விமர்சித்து பேச வேண்டும் என கேட்டுக் கொண்டதால்தான் அவருக்கு பேச அமித்ஷா அனுமதி கொடுத்தார் எனவும் அழகிரி சுட்டிக்காட்டியுள்ளார்.

பகிரவும்...