Main Menu

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியையும் கைப்பற்றியது தி.மு.க.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தின் வெற்றி உறுதியானது.

இதன்படி 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ளார். இதனிடையே ஒப்புகைச் சீட்டு சரிபார்க்கும் பணி இடம்பெற்று வருவதனால் இறுதி முடிவு மாலை 4.30 மணிக்கு அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

வேலூர் தொகுதியில், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 4 இலட்சத்து 85ஆயிரத்து 340 வாக்குகளை பெற்றுள்ளதோடு அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 4 இலட்சத்து 77 ஆயிரத்து 199 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அத்துடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான தீபலட்சுமி 26,995 வாக்குகளை பெற்றுள்ளதோடு நோட்டாவுக்கு 9417 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதேவேளை, 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் வேலூர் தொகுதியைத் தவிர்த்து 37 இடங்களை தி.மு.க. கைப்பற்றியது. இந்நிலையில் வேலூர் தொகுதியின் வெற்றியுடன் 38 இடங்கள் தி.மு.க.வுக்கு கிடைத்துள்ளது.

பகிரவும்...