Main Menu

வாழ்க்கை கற்பிக்காததை சாவா கற்பிக்கும் – கமல்ஹாசன்!

கொரோனாவிற்கு எதிராக உலக நாடுகள் போராடி வரும் நிலையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கொரோனா பாதித்த நபரின் வசிப்பிடங்களுக்கு 5 கிலோ மீட்டா் சுற்றளவிலும், 3 கிலோ மீட்டா் சுற்றளவிலும் உள்ள பகுதிகள் வரையறுக்கப்பட்டு அங்கிருக்கும் மக்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்படுகின்றனா்.

இதையடுத்து சென்னை, ஈரோடு, கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, வேலூா், சேலம், திருப்பூா், தஞ்சாவூா், விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளைக் கண்காணிக்க தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 42-ஆக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 8 பேருக்கு அந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிகை 50ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரகாக உலக நாடுகள் போராடி வரும் நிலையில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கவிதை ஒன்றை எழுதி உள்ளார்.

பகிரவும்...