Main Menu

விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு – ஜூன் 15க்கு நீதிபதி ஒத்திவைத்தார்

தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிபதி சசிகலா முன்பு 4 ஆவது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு ஜூன் மாதம் 15 ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

முன்னதாக, சங்கீதா தரப்பிலிருந்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி அன்று முதன்முறையாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.