Main Menu

கொரோனா வைரஸினால் சிரியாவில் முதலாவது உயிரிழப்பு பதிவானது!

சிரியாவில் மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த நபர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர் என்றும் அந்நாட்டில் கொரோனா வைரஸினால் பதிவான முதல் உயிரிழப்பு இது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்பது ஆக அதிகரித்துள்ளது என அமைச்சு கூறியது, ஆனால் மருத்துவர்கள் இன்னும் பலர் நாட்டில் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றனர் என்று கூறுகிறார்கள்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு உற்பட கடுமையான விதிகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

வணிக நிறுவனங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பெரும்பாலான அரச அலுவலகங்கள் மூடுவதற்கும் பொது போக்குவரத்தை நிறுத்துவதற்குமான நகர்வுகள் போரினால் சோர்ந்துபோன மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதேவேளை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் உணவு பொருட்களின் விலை அதிகரித்ததாகவும் இதன் காரணமாக பல பகுதிகளில் உணவு தட்டுப்பாடு காணப்படுவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...