Main Menu

வழமைக்குத் திரும்பும் வீதி கட்டுப்பாடுகள்!

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் போக்குவரத்து விதிமுறைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரிஸிற்குள் Crit’Air ஒட்டிகளில் வகை 0 முதல் வகை 2 வரையான வாகனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இந்த புதிய நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இன்று பரிஸிற்குள் அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மூன்று நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு €68 வரையான தண்டப்பணம் அறவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...