Main Menu

மூத்த குடிமக்களுக்கு பாதி விலையில் நவிகோ அட்டை

இல்-து-பிரான்சுக்குள் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு பாதி விலையில் நவிகோ அட்டை வழங்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.  62 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக இந்த வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. பணி புரிபவர், வேலையில்லாதோர், ஓவ்யூதியம் பெறுபவர் என எந்த பாகுபாடும் இல்லாமல் 62 வயது எல்லை மாத்திரமே வைத்து இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் Navigo Senior €37.60 களுக்கு வழங்கப்பட உள்ளது. €75.20 எனும் வழக்கமான விலையில் இருந்து 50% விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளது.  இந்த Navigo Senior அட்டையினால் 1.9 மில்லியன் மக்கள் பயன்பெறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. மாகாண முதல்வர் Valerie Pécresse இந்த வசதியினை முன்னதாகவே அறிவித்திருந்த நிலையில், இம்மாதம் நவம்பர் 1 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளார்.

பகிரவும்...