Main Menu

மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். சிவசக்தி ஆனந்தன் (படங்கள் இணைப்பு)

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் வசித்துவரும் இறுதிக்கட்ட போரினால் அவையங்களை இழந்துள்ள, கடும் காயமுற்றுள்ள போராளிகள் பொதுமக்களுக்கு பிரான்ஸ்ஸில் வசித்துவரும் திரு.திருமதி தேவமனோகரன் தம்பதிகளின் புத்திரன் பிரவீன் அவர்களின் 15ஆவது அகவையை முன்னிட்டு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

ரி.ஆர்.ரி வானொயிலின் ஏற்பாட்டில், ‘இணையும் கரங்கள்’ அமைப்பின் தலைவர் வீரசிங்கம் சசிகுமார் தலைமையில் 29.03.2015 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டு நூறு குடும்பங்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.

அங்கு அவர் தனது உரையில்,

யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு வருடங்களை கடந்துள்ள போதிலும்கூட, அப்போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தமது நாளாந்த வாழ்வாதார தேவைகளுக்காகவும், மருத்துவ வசதிகளுக்காகவும் பல்வேறு கஸ்டங்களை எதிர்கொண்டுள்ளன.

வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 540 பேர் அவையங்களை இழந்தும், கடும் காயமுற்றும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்களில் 160 பேர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

வடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்துக்கு நிரந்தர தீர்வைக்காண, புதிய அரசு விசேட செயலணியை உருவாக்கி, அதன் ஊடாக முழுமையான தகவல் திரட்டுகளை மேற்கொண்டு, மாதாந்த உதவித்தொகையும், வாழ்வாதாரத்துக்கான நிரந்தர உதவியும், மருத்துவ உதவிகளையும் வழங்கும் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் எனவும் ஆனந்தன் எம்.பி கேட்டுக்கொண்டார்.

15வது அகவையை எய்தும் திரு.திருமதி தேவமனோகரன் தம்பதிகளின் புத்திரன் பிரவீன் அவர்களுக்கு ‘இணையும் கரங்கள்’ அமைப்பினர் தமது பிறந்தநாள் வாழ்த்துகளையும், தேவமனோகரன் குடும்பத்தினருக்கும் ரி.ஆர்.ரி வானொலி நிறுவனத்தினருக்கும் தமது உளம்நிறைந்த நன்றிகளையும் தெரிவித்தனர்.

மேற் குறிப்பிட்ட வைபவத்தில் இடம் பெற்ற உரையின் ஒரு பகுதியை ஒலி வடிவமாகக் கேட்க கீழே அழுத்துங்கள்

??????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

??????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

??????????????????????????????? ???????????????????????????????

??????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

 

??????????????????????????????? ???????????????????????????????

பகிரவும்...