Main Menu

வவுனியா வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்,கர்ப்பிணி தாய்மாருக்கான போசாக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கிவைப்பு

வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட
வ/மன்னகுளம் அ.த.க பாடசாலை,வ/பெரியகுளம் அ.த.க பாடசாலை,
வ/பண்டாரவன்னியன் வித்தியாலயம்,வ/சிறி ராமகிருஸ்ண வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 103 பாடசாலைமாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 04.11.2019 முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா மற்றும் செல்வ உதயன் ஆகியோரால் வழங்கிவைக்கப்பட்டது. இந் நிகழ்வில் பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை லண்டனை சேர்ந்த திரு சத்தியசீலன் அவர்கள் தனது மகன் கிருத்திக்கின் 10வது பிறந்ததினத்தை முன்னிட்டு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...