Main Menu

மருத்துவர்கள், உதவியாளர்களுக்கு இலவச TGV பயணம்

கொரோனா வைரசுக்கு எதிராக பெரும் இடைவிடாத போராட்டத்தை மேற்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்களுக்கு  தொடருந்து சேவைகள் இலவசமாக்கப்பட்டுள்ளன.

SNCF இத்தகவலை சற்று முன்னர் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசுக்கு எதிராக இடைவிடாது போராடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், தாதிமார்களுக்கு TGV மற்றும் Intercités தொடருந்துகளில் பயணிக்க எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது. மருத்துவ குழு என அடையாள அட்டையை உறுதிப்படுத்தினால், நாடு முழுவதும் எங்கேயும் பயணிக்கலாம் என SNCF இன் இயக்குனர் Alain Krakovitch ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

பகிரவும்...