Main Menu

கொரோனா வைரசுக்கு மேலும் இரு வைத்தியர்கள் பலி

கொரோனா வைரஸ் காரணமாக மேலும் இரு மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக சற்று முன்னர் செய்திகள் வெளியாகியுள்ளன.  இன்று திங்கட்கிழமை காலை இத்தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை Haut-Rhin மற்றும் Moselle மாவட்டத்தில் இந்த உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த இருவரும் 60 மற்றும் 68 வயதுடையவர்கள் எனவும், இருவரும் COVID-19 தொற்று நோய்க்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமையும் உறுதிப்படுத்தப்படுள்ளது.   அங்கிருந்து கிடைக்கும் மேலதிக தகவல்களின் படி, Jean-Marie Boegle எனும் 68 வயதுடைய மகப்பேறியல்-மகளிர் மருத்துவ நிபுணரும், (Moselle நகர மருத்துவமனையிலும்) , Sylvain Welling எனும் 60 வயதுடைய பொது மருத்துவரும் (Saint-Avold நகர மருத்துவமனையிலும்) உயிரிழந்துள்ளனர். 

பகிரவும்...