Main Menu

போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது – தமிழக அரசு

இழப்பீட்டு தொகை செலுத்தப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு மேலும் அறிவித்துள்ளது.

மேலும் போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகமாக மாற்ற சாத்தியம் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான இழப்பீட்டு தொகையை செலுத்தியது தமிழக அரசு!

ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பது தொடர்பில் நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டு தொகையை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதன்படி சென்னை சிவில் நீதிமன்றத்தில் 67.9 கோடி ரூபாயை தமிழக அரசு செலுத்தியுள்ளது.

அத்துடன்  ஜெயலலிதா செலுத்தாமல் நிலுவையில் இருக்கும் வருமான வரி பாக்கி தொகையை செலுத்தவும் தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை  நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...