Main Menu

பிரான்ஸ்: 200 மில்லியன் தடுப்பூசிகள் முன்பதிவு – பிரதமர்

கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் திகதியை பிரதமர்  Jean Castex சற்று முன்னர் அறிவித்தார்.  பிரான்ஸ் 200 மில்லியன் தடுப்பூசிகளை முன்பதிவு செய்துள்ளது என சற்று முன்னர் பிரதமர்  Jean Castex அறிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கும் போது, கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக மோசமாக ஐரோப்பாவை பாதித்துள்ளது. அதன் வீரியம் குறைவடையவில்லை என தெரிவித்தார்.  மேலும், டிசம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் கொரோனா தடுப்பூசிகள் பிரான்சை வந்தடையும். வரும் நாட்களில் ஒரு மில்லியன் பேருக்கு தடுப்பூசிகள் போடப்படும். ஒருவருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்படவேண்டும்! எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பகிரவும்...