Day: December 17, 2020
ஜனாதிபதி மக்ரோனுக்கு கொரோனா தொற்று
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அண்மைய நாட்களில் மக்ரோனுக்கு கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் தென்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவு இன்று வியாழக்கிழமை வெளியானது. அதிலேயே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஜனாதிபதிமேலும் படிக்க...
ஐரோப்பாவில் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொவிட்-19 தொற்று பரவல் தீவிரமடையும்!
2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதனால், மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பைத் தொடர்ந்து மக்களின்மேலும் படிக்க...
பிரான்ஸ்: 200 மில்லியன் தடுப்பூசிகள் முன்பதிவு – பிரதமர்
கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் திகதியை பிரதமர் Jean Castex சற்று முன்னர் அறிவித்தார். பிரான்ஸ் 200 மில்லியன் தடுப்பூசிகளை முன்பதிவு செய்துள்ளது என சற்று முன்னர் பிரதமர் Jean Castex அறிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கும் போது, கொரோனா தொற்றின் இரண்டாம் அலைமேலும் படிக்க...
நைஜீரியாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்களில் 17பேர் மீட்பு- இருவர் உயிரிழப்பு!
வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு பாடசாலையிலிருந்து போகோ ஹராம் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்ட 17 மாணவர்கள் மீட்கப்பட்டதாக கட்சினா மாநில ஆளுநர் அமினு மசாரி தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த மீட்பு நடவடிக்கையின் போது இருவர் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவர்களில் பெரும்பாலோர்மேலும் படிக்க...
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்து!
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து குழந்தைகளுக்கான சர்வதேச தன்னார்வ அமைப்பான யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்களுக்குமேலும் படிக்க...
3 நாள் விசா… ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு
கைலாசா நாட்டிற்கு வர விரும்புவோரை ஆஸ்திரேலியாலில் இருந்து இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக சாமியார் நித்யானந்தா பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ளமேலும் படிக்க...
சசிகலாவை தாமதமாக விடுதலை செய்ய திட்டமிட வேண்டும் – உளவுத்துறை
சொத்து குவிப்பு வழக்கில் தண்டணை அனுபவித்து வரும் சசிக்கலாவை தாமதமாக விடுதலை செய்ய திட்டமிட வேண்டும் என உளவுத்துறை சிறை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. சசிகலா விடுதலையாகும் நாளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக கர்நாடக உளவுத்துறை சிறை நிர்வாகத்துக்கு அறிக்கைமேலும் படிக்க...
இலங்கைக்கு கொரோனா வைரஸ் மருந்து விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை – சுதர்சினி
இலங்கைக்கு கொரோனா வைரஸ் மருந்து கூடிய விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என கொரோனா வைரஸ் விவகாரங்களிற்கான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் மருந்தினை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
தமிழ் மக்களின் போராட்டம் நலிவுற்று போக வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு- இன்பராஜா
தமிழ் மக்களின் போராட்டம், நலிவுற்று போக வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றதென யாழ்.மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளர் இன்பராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது?- அரசாங்கத்திடம் இராதாகிருஷ்ணன் கேள்வி
‘இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது’ என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். ‘இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும்மேலும் படிக்க...