Main Menu

ஐரோப்பாவில் 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொவிட்-19 தொற்று பரவல் தீவிரமடையும்!

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதனால், மக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பைத் தொடர்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாகியுள்ளது.

பல்வேறு நாடுகளில் தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் ஐரோப்பாவின் ஜேர்மனி, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எதிர்வரும் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் மத்தியில் மக்கள் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையில் அலட்சியம் செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...