Main Menu

பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி ஆதரவில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி நிறுவனத்தின் ஆதரவில் 21.01.2015 இல்
மீள்க்குடியேற்றம் நடைடிபெற்றுக் கொண்டு இருக்கின்ற பிரதேசமான வலிகாமம் வடக்கு
கொல்லன்கலட்டி இந்து வித்தியாலய மாணவ மாணவிகளுக்கு இவ்வாண்டிற்கு தேவையான
கற்றல் உபகரணங்களை வடக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்
அவர்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்
அவர்கள் உரையாற்றுகையில்…
1870 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பழமை வாய்ந்த இப்பாடசாலையானது யுத்தின்
கோரப்பிடிக்குள் அகப்பட்டு சின்னா பின்னமாகிய நிலையிலிருந்து கடந்த சில
ஆண்டுகளாக படிப்படியாக மீள்க்குடியேற்றம் நடைபெற தொடங்கியதையடுத்து புதிய
கட்டிடமொன்று உருவாக்கப்பட்டு பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்
ஆரம்பகால கட்டிடத்தின் தூண்கள் பாரிய அழிவுற்ற கூரையுடன் தற்போதும்
காணப்படுகின்றது.
இப்பழமையான பார்வை பாதிக்காத வகையில் இம்மண்டபத்தை புனரமைப்பதற்கான விண்ணப்பம்
வடக்கு மாகாண அமைச்சிடம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீடுகளில்
இக்கட்டிடத்திற்கான ஒதுக்கீடும் மேற்கொள்ளப்படும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழிருந்து
மீள்க்குடியேற்றத்திற்கென அண்மைய ஆண்டுகளில் விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் காடு
மண்டிய நிலையில் உட்கட்டமைப்புகள், பொது பயன்பாட்டிற்கான கட்டிடங்கள் வீடுகள்
என அனைத்தும் அழிவுற்ற நிலையில் காணப்படுகின்றது. எனவே மக்களை
மீள்க்குடியேற்றத்திற்கு ஊக்குவிக்கும் வகையில் அழிவுற்ற இவ்வசதிகள் மீள
கட்யெழுப்பப்பட வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கின்றோம். இவ்வகையில்
பாடசாலைகள், கோவில்கள், சனசமூக நிலையங்கள், வீதிகள் போன்றவை விரைவாக
செயற்படுத்தப்பட வேண்டியனவாகும்.
இப்பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்க இவ்வூரைச் சேர்ந்த
புலம்பெயர் உறகளில் ஒருவர் முன்வந்திருக்கின்றமை பாராட்டுக்குரியது.
இப்பாடசாலைக்கு பாதுகாப்பு வேலி அவசியமானதாக காணப்படுகின்றது. 2015 ஆம்
ஆண்டிற்கான மாகாணசபை உறுப்பினரான எனக்குரிய ஒதுக்கீட்டில் இருந்தும், யாழ்
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ; பிறேமச்சந்திரன் அவர்களுக்குரிய
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு கீழான ஒதுக்கீட்டில் இருந்தும்
நிதியை வழங்கி இப்பாதுகாப்பு வேலியை அமைத்து கொடுக்கவுள்ளோம்.
இப்பாடசாலைக்கு அவசியமான பௌதீக வளங்களை நாம் ஏற்படுத்திக் கொடுக்கும் அதேவேளை
இச்சுற்றாடலில் வாழ்க் கூடிய மக்கள் தமது பிள்ளைகளை இப்பாடசாலையில் சேர்த்து
கற்பிக்க முன்வர வேண்டும். என்ற கோரிக்கையை இவ்விடத்தில் முன்வைக்க
விரும்புகின்றேன்.
பாடசாலைகளின் வளர்ச்சியென்பது ஆசியர்களின் முயற்சி மட்டுமின்றி பெற்றோர்
மற்றும் ஊர் மக்களின் ஒத்துழைப்பின்றி சாத்தியமாகாது. பாடசாலையில் கல்வித்தரம்
அதிகரிப்பதற்கும். இவர்களின் கூட்டு முயற்சி அவசியமாகும். இப்பாடசலைக்கு
புத்துயிரூட்டி அதனை இயங்க வைப்பதில் ஈடுபாட்டுடன் உழைக்கு இப்பாடசாலையின்
பழைய மாணவியாகிய அதிபர் அவர்களும்; ஆசிரியர்களும் பாராட்டுக்குரியவர்கள்.
மாகாணசபை உறுப்பினர் என்ற வகையில் பாடசாலையின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும்
மாகாண கல்வி அமைச்சின் ஊடாகவும் தனிப்பட்ட முறையிலும் அவசியப்படுகின்ற உதவிகளை
வழங்க முன்னின்று உழைப்பேனென அவர் தனதுரையில் தெரிவித்தார்.

கலாநிதி. கந்தையா சர்வேஸ்வரன்
மாகாணசபை உறுப்பினர் – வடக்கு மாகாணம்

SAM_1944SAM_1948SAM_1954SAM_1961SAM_1972SAM_1973SAM_1975SAM_1982SAM_1987

பகிரவும்...