Main Menu

பிரான்ஸ் ஜெட் மார்கட் ஆதரவில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்

பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஜெட் மார்கட்டிங் மாணவர்
உதவித்திட்டத்தின் மூலம் 13.01.2015 இல் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இளவாலை
மாரீசன் கூடல் சுப்பிரமணிய வித்தியாலய மாணவ மாணவிகள் 100 பேருக்கும்
இவ்வாண்டிற்கான கற்றல் உபகரணங்களை வடக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி
கந்தையா சர்வேஸ்வரன் அவர்கள் வழங்கி வைத்தார். இந்த நிகழ்வில் வலி வடக்கு
பிரதேச சபை உறுப்பினர் சிவகுமாரன், மாரீசன்கூடல் கிராமசேவகர், பாடசாலை பழைய
மாணவர்கள், பெற்றேர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்
அவர்கள் உரையாற்றுகையில்…
யாழ் மாவட்டத்தின் அதி பின்தங்கிய பாடசாலைகள் என்ற வகுதிக்குள் வருகின்ற
இப்பாடசாலை 80 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. யுத்தம் இப்;பிரதேச மக்கள் அனைவரையும்
இடம்பெயர வைத்ததாலும் நீண்ட காலமாக இப்பிரதேசம் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ்
இருந்ததாலும் இப்பாடசாலை ஒரு தசாப்பத்திற்கும் மேலாக இயங்காமல் இருந்தது.
இன்றும் இப்பிரதேசத்தின் பெருமளவு மக்கள் மீள் குடியேறி இருக்காத போதும்
இரண்டு கிலோ மீற்றர்களுக்கு அப்பால் வாழக்கூடிய மாணவர்களை தேடி அழைத்து வந்து
இப்பாடசாலையில் இணைத்து இதனை வெற்றிகரமாக இயக்குவதற்காக இப்பாடசாலையின் அதிபர்
ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் உள்ளிட்ட அனைவரிற்கும் எமது பாராட்டுக்களையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இப்பாடசாலை பரிசளிப்பு விழாவில் பிரதம
அதீதியாக கலந்து கொண்ட போது இரண்ட விடயங்களை நான் குறிப்பிட்டிருந்தேன். ஒன்று
இந்த மாணவர்களும் 2015 ஆம் ஆண்டுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குவேன் என்பது,
இரண்டாவது மிகவும் பழைமை வாய்ந்த இக்கட்டிடம் போதாமல் இருப்பதால் மெலும் ஓர்
கட்டிடத்தை அமைத்து தருவதற்கு முயற்சி செய்வேன் என்பதுமாகும். இவ்வகையில் ஜெட்
மார்க்கட்டிங் நிறுவத்தின் உதவியுடன் இவ்வாண்டுக்கான கற்றல் உபகரணங்களை இன்று
உங்களுக்கு வழங்க முடிந்தமையை இட்டு மனமகிழ்வடைகின்றேன்.
புதிய கட்டிடம் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சரிடம் விண்ணப்பம்
கொடுக்கப்பட்டுள்ளது, பாடசாலை பௌதீக வளங்கள் தொடர்பான இறுதி முடிவுகள் அடுத்த
மாத இறுதிக்குள் எடுக்கப்படும். இச்சமயத்தில் இந்த பாடசாலைக்குரிய புதிய
கட்டிடத்தை 2016 ஆம் ஆண்டில் செய்து முடிப்பதற்கான முடிவு மேற்கொள்ளப்படும்.
இலங்கையில் நிலவக் கூடிய ஒழுங்கற்றதும் அடிக்கடி மாறுதலுக்கு
உள்ளாக்கப்டுகின்ற கல்விக் கொள்கைகள் காரணமாக பெருமளவு பாடசாலைகள் பௌதீக
வளங்கள், ஆசிய வளங்கள் ஆகியவற்றிலும். மாணவர்களை உள்ளீப்பதிலும் பெரும்
ஏற்றத்தாழ்வுகளை கொண்டதாக காணப்படுகின்றன. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
நகரப்பாடசாலை-கிராமிய பாடசாலைகள் தரமான பாடசாலைகள் தரமற்ற பாடசாலைகள் என்ற
பாகுபாடுகள் இல்லாத வகையில் பௌதீக வளங்கள், ஆசிரிய வளங்கள் கற்பித்தல் தங்கள்
ஆகியவற்றில் சமத்துவம் பேணப்பட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் பெரும் தூரம்
கல்வி கற்க வேண்டிய சிரமம் நீக்கப்படுவதுடன் பிள்ளைகளின் கல்விக்காக
பெற்றோருக்கு ஏற்படும் அலைச்சல்களும், மன உழைச்சல்களும், செலவுகளும்
இல்லாதொழிக்கப்படும். இத்தகைய ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை மேற்
கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக எமது கருத்துகளையும் திட்டங்களையும்
சமர்ப்பித்து வருவதுடன் இவை தொடர்பான இறுதி வடிவங்களை அடுத்த ஓரிரு மாதங்களில்
அடைய முடியும் என எதிர்ப்பாக்கின்றோம்.
எதிர்காலத்தில் எந்தப்பாடசாலைக்கும் சுற்றுப்புறத்தில் வாழ்க் கூடிய மாணவர்கள்
தங்கள் அயல் பாடசாலையிலேயே விரும் கல்வி கற்கும் நிலையை ஏற்படுத்;துவதே எமது
நோக்கமாகும். எமது இத்திட்டங்கள் நிறைவேற்றுவதற்கு கல்விச் சமூகம் மற்றும்
பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென இச்சந்தர்ப்பத்தில்
தங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
கலாநிதி. கந்தையா சர்வேஸ்வரன்
மாகாணசபை உறுப்பினர் – வடக்கு மாகாணம்

SAM_1759SAM_1762SAM_1764 (1)SAM_1774SAM_1776SAM_1777SAM_1782 (1)SAM_1787SAM_1791SAM_1800SAM_1803SAM_1810SAM_1816SAM_1819

பகிரவும்...