Main Menu

பிரான்ஸில் நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவானது!

பிரான்ஸில் அசுர வேகத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவி வருகின்ற நிலையில், அங்கு நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் எட்டாயிரத்து 975பேர் பாதிக்கப்பட்டதோடு, 18பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிக்கப்பட்ட 16ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில், இதுவரை மூன்று இலட்சத்து ஒன்பது ஆயிரத்து 156பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30ஆயிரத்து 724பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை ஒரு இலட்சத்து 91ஆயிரத்து 226பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 464பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும், இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 87ஆயிரத்து 206பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிரவும்...