Main Menu

பிரான்சில் எரிபொருட்களின் விலை மேலும் அதிகரிப்பு

இவ்வருட ஆரம்பத்தில் இருந்து எரிபொருட்களின் விலை அதிகரித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

பிரான்சில் சில நிரப்பு நிலையங்களில் எரிபொருட்களின் விலை €2 யூரோக்களுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தபோதும், தற்போது உத்தியோகபூர்வமாக டீசல் மற்றும் SP 95 பெற்றோலின் விலை €2 யூரோக்களை கடந்துள்ளது. டீசல் ஒரு லிட்டர் €2.1165 யூரோக்களுக்கும், SP 95 பெற்றோல் €2.0042 யூரோக்களுக்கும் விற்பனையாகிறது.

வரும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் எரிபொருட்களின் விலை லிட்டருக்கு 18 சதங்களினால் குறைக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.  

பகிரவும்...