Main Menu

பிரான்சில் எரிவாயுவை சிக்கனமாக பயன் படுத்தும்படி எச்சரிக்கை

பிரெஞ்சு மக்கள் எரிவாயுவை மிகச் சிக்கனமாக பயன்படுத்தாவிட்டால் மோசமான நிலமையில் சென்று முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் எரிசக்தி ஆணையத்தின் (Commission de régulation de l’énergie) தலைவர் Jean-François Carenco இதனை அறிவித்துள்ளார். தற்போது தட்டுப்படின்றி கிடைக்கும் எரிவாயுவை மக்கள் சிக்கனமாக பயன்படுத்தாவிடின், வரும் குளிர்காலத்தை எதிர்கொள்ளக்கூடிய எரிவாயு கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தொழில் நிறுவனங்கள், தொழிலகங்களிலும், குளிரூட்டிகளை பயன்படுத்துவதிலும், வீதி விளக்குகளை எரியவைப்பதிலும் மிகுந்த சிக்கனம் தேவை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பகிரவும்...