Main Menu

பரிஸ் உதைபந்தாட்ட கழகத்தின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மரணம்

பரிஸ் உதைபந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் Gérard Houllier மரணமடைந்துள்ளார்

நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர் தனது 73 ஆவது வயதில் உடல்நலக்குறைவால் இயற்கையெய்தியதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவர் PSG அணி உட்பட OL மற்றும் Liverpool ஆகிய அணிகளுக்கும் பயிற்சிவிப்பாளராக இருந்தார். இவர் தனது கடமைக் காலத்தில் மிகவும் திறமையான மற்றும் புகழ்பெற்ற பயிற்சிவிப்பாளராக இருந்தார்.

1973 ஆம் ஆண்டு தனது 26 ஆவது வயதில் பயிற்சிவிப்பாளராக ஆனார். அதுவரை ஆசிரியராக கடமையாற்றிக்கொண்டிருந்த இவர், தனது பணியை விட்டு விலகி, Touquet AC அணியின் முதன்முறையாக பயிற்சிவிப்பாளராக மாறினார்.

அதன் பின்னரே, படிப்படியாக புகழடைந்து தனது அசாத்திய திறமையால் PSG அணிக்கு பயிற்சிவிப்பாளர் ஆனார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, இவர் தனது சொந்த ஊரான Hucqueliers (Pas-de-Calais) இல் உடல்நலக்குறைவால் சாவடைந்தார்.

பகிரவும்...