Main Menu

ஃபைசர்- பயோஎன்டெக் தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது சிங்கப்பூர்!

ஃபைசர்- பயோஎன்டெக் நிறுவனங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு, சிங்கப்பூர் ஒப்புதல் அளித்துள்ளது.

டிசம்பர் மாத இறுதிக்குள் முதல் தடுப்பூசி போட எதிர்பார்க்கப்படுவதாக பிரதமர் லீ ஹ்சியன் லூங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்த மாத இறுதிக்குள் முதல் கப்பல் வர வேண்டும். 2021ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அனைவருக்கும் போதுமான தடுப்பூசிகளை நகர மாநிலம் எதிர்பார்க்கிறது.

மேலும் இது அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் நீண்ட கால குடியிருப்பாளர்களுக்கும் இலவசமாக அமையும். சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி ஊழியர்கள், முதியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்குப் பிறகு, நானும் பிற அரசாங்க அதிகாரிகளும் ஆரம்பகால பெறுநர்களில் இடம்பெறுவார்கள்’ என கூறினார்.

இந்த தடுப்பூசியை பயன்படுத்த ஒப்புதல் அளித்த பிற நாடுகளில் அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் மெக்ஸிகோவும் அடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...