Main Menu

பணியிடைநீக்கம் எதிரொலி: 50இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் இராஜினாமா!

அமெரிக்காவில் முதியவரை தாக்கி தள்ளிவிட்ட இரு பொலிஸ் அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, 50இற்க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தங்களது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

படைகளின் அவசரகால பதிலளிப்பு குழுவில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்களே தவிர, படையில் இருந்து அல்ல என பஃபேலோ பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.

நியூயோர்க் மாநிலத்தின் பஃபேலோவில், நயாகரா சதுக்கத்தில் நடந்த போராட்டத்தின் பின்னர் 75 வயயோதிபரை, இரு பொலிஸ் அதிகாரிகள் தரையில் தள்ளிவிடும் காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறித்த வயயோதிபர் பொலிஸ் அதிகாரிகளிடம் ஏதே கூறுவதற்கு செல்லும் போது, அவர் அதிகாரிகளால் தள்ளிவிடப்படுகிறார். கீழே விழுந்த அந்த நபரின் தலையில் இருந்து இரத்தம் சிந்திய போதும், அவரை கடந்து சென்ற பல அதிகாரிகள் அவரை பொருட்படுத்தவில்லை.

இந்த காணொளி வெளியாகி மக்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளையும் உடனடியாக இடைநீக்கம் செய்ய பஃபேலோ பொலிஸ் ஆணையர் பைரன் லாக்வுட் உத்தரவிட்டார்.

இந்தநிலையில் இரு அதிகாரிகளின் பணியிடைநீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 57 பொலிஸார் தங்களுடைய பதவியை இராஜினாமா செய்தனர்.

தலையில் பலத்த காயமடைந்த வயயோதிபர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும், அவருடைய நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...