Main Menu

நிலவில் கால் பதிக்கும் முதல் பெண் அமெரிக்கராக இருப்பார் – மைக் பென்ஸ்

நிலவில் முதன்முதலாக கால்பதித்த மனிதர் என்ற பெருமைக்குரியவரான நீல் ஆம்ஸ்ட்ராங் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார்.

இந்த நிலையில், நிலவில் கால் பதிக்கும் முதல் பெண், அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்று அந்நாட்டு துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட 105 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ள சாட்டிலைட் 2019 என்ற கருத்தரங்கு வாஷிங்டனில் தொடங்கியுள்ளது. இதில் கலந்துகொண்டு மைக் பென்ஸ் பேசினார்.

அப்போது, “ஜனாதிபதி டிரம்பின் வழிகாட்டுதலின்பேரில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் நிலவில் கால் பதிக்கும் முதல் பெண் நிச்சயமாக அமெரிக்க நாட்டினராகத்தான் இருப்பார்” என்று அவர் கூறினார்.

பகிரவும்...