Main Menu

திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம் – கோவாவில் சட்டம் வருகிறது

கோவா மாநிலத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் நோய் உள்ளதா என்பதை கண்டறியும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவா மாநிலத்தில், திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் நோய் உள்ளதா என்பதை கண்டறியும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகவலை அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி விஷ்வஜித் ரானே தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த யோசனைக்கு மாநில சட்டத்துறை ஒப்புதல் அளித்து விட்டது. மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்த பிறகு, வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இதுதொடர்பான மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்” என்றார்.

பகிரவும்...