Main Menu

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க நானும் அழைக்கப் பட்டுள்ளேன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க நானும் அழைக்கப்பட்டுள்ளேன், என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். 

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பது தொடர்பாக சட்டப் பிரச்சினையை சுட்டிக்காட்டி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, தெரிவுக்குழு முன் ஆஜராவது பொருத்தமானது என்று கூறினார். 

இந்த பிரச்சினைக்கு சபாநாயர் அவர்கள் தீர்வு ஒன்றை வழங்கியுள்ளீர்கள். சரியோ பிழையோ தீர்வை வழங்கியுள்ளீர்கள். சபாநாயகர் வழங்கியுள்ள தீர்வில் எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. நீங்கள் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். தெரிவுக் குழுவின் முன் சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்ட ஒரு நபர் என்ற ரீதியில் அந்த சம்பவம் குறித்து அந்தக்குழுவுடன் கலந்துரையாடுவதற்கு நான் விருப்பங்கொண்டுள்ளேன்” என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...