Main Menu

தாய்லாந்து மன்னரால் மேலும் நான்கு அதிகாரிகள் திடீர் பதவிநீக்கம்!

தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் (Maha Vajiralongkorn), மேலும் நான்கு அதிகாரிகளைப் பதவிநீக்கம் செய்துள்ளார்.

கடந்த வாரம் மன்னரை அவமதித்ததாகக் குற்றம்சுமத்தப்பட்ட 34 வயதான ராணுவ கட்டளை அதிகாரி மற்றும் அரசிக்கான தரங்களை கொண்டிருந்த பெண்ணொருவரின் அனைத்துப் பட்டங்களும் அகற்றப்பட்டன.

இந்தநிலையில், மிக மோசமான நடத்தை, பாலியல் ஒழுங்கீனம் ஆகியவை காரணமாக அரண்மனை அந்தப்புரக் காவல் அதிகாரிகள் இருவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அரண்மனைச் சேவகர்களின் நன்நடத்தை விதிமுறைக்கு மாறாக அவர்கள் செயற்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

அரண்மனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மேலும் இரண்டு ராணுவ அதிகாரிகளும் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி நேரத்தில் விதிமுறைகளைத் தளர்த்தியதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சென்ற வாரமும், அரண்மனை அதிகாரிகள் 6 பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரச சேவைக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதன் அடிப்படையில் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டதாக தாய்லாந்து மன்னரின் உத்தியோகபூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...