Main Menu

டிக்டொக் மற்றும் வீ சட் செயலிகளை பதிவிறக்க அமெரிக்காவில் தடை

சீன நிறுவனத்திற்கு சொந்தமான, டிக்டொக் மற்றும் வீ சட் செயலிகளை பதிவிறக்குவதற்கான தடையை நாளை முதல் தடைவிதிக்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு சொந்தமான செயலிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி அதனை தடை செய்வது குறித்து ஆராய்ந்து வந்தது.

இந்நிலையில், டிக்டொக் மற்றும் வீ சட் செயலிகளுக்கான தடையை ஞாயிற்றுக்கிழமை செயற்படுத்த அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனையடுத்து சீன மொழி பேசுபவர்களிடையே பாரிய பயன்பாட்டைக்கொண்ட வீசெட்டையும் அப்பிள், கூகுள் இயக்கப்படும் ஒன்லைன் சந்தைகளிலிருந்து டிக்டொக்கையும் தடை செய்யவுள்ளது.

அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை முதல் வீசட் தடைசெய்யப்படும் அதேவேளை, தற்போது டிக்டொக்கை பயன்படுத்தும் பயனர்களால் நவம்பர் 12 ஆம் திகதி வரை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு முன்னர் டிக்டொக் குறித்த தேசிய பாதுகாப்பு சந்தேகங்கள் தீர்க்கப்பட்டால், உத்தரவு நீக்கப்படலாம் என்று வர்த்தகத் துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை 2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து கிடைத்துவிடுமென எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...