Main Menu

சுவிஸ் ஜனாதிபதி இன்று அமெரிக்க ஜனாதிபதியை சந்திப்பதற்காக அமெரிக்கா செல்கிறார்

சுவிஸ் ஜனாதிபதியான Ueli Maurer இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திப்பதற்காக அமெரிக்கா செல்லும் நிலையில், இரண்டு நாட்டு தலைவர்களுக்கும் இடையில் நிகழவிருக்கும் பேச்சு வார்த்தைகளில் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிகிறது.

இரண்டு தலைவர்களும் ஏற்கனவே ஜனவரி மாதம் டாவோசில் நடந்த உலக பொருளாதார மாநாட்டின்போது சந்திப்பதாக இருந்தது.

ஆனால் அமெரிக்காவில் அரசு செயல்படா நிலை ஏற்பட்டதையடுத்து அந்த சந்திப்பை ட்ரம்ப் ரத்து செய்தார்.

1992க்குப் பின் சுவிஸ் ஜனாதிபதி ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியை வெள்ளை மாளிகையில் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...