Main Menu

சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப் பூச்சிகளால் பலர் பாதிப்பு

சுவிட்சர்லாந்தில் பரவிவரும் கம்பளிப்பூச்சிகளால் பலர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றார்கள்.

சுவிட்சர்லாந்தில் Processionary Caterpillar   என்னும் ஒருவகை அந்துப்பூச்சியின் கம்பளிப்பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது.

இதனால் பலருக்கு நச்சுபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பூச்சிகளின் நுண் முடி உடலில் பட்டால், பயங்கர எரிச்சல் ஏற்படுவதோடு, ஒவ்வாமையும் சில நேரங்களில் ஆஸ்துமா பிரச்சினையும் ஏற்படுகின்றது.

அதேநேரம் இந்த பூச்சிகளை நுகர்ந்து பார்க்கும் நாய்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகின்றன.

இந்த கம்பளிப்பூச்சிகளும், அவற்றின் அந்துப்பூச்சிகளும் (moth) ஐரோப்பா முழுவதும் சுவிட்சர்லாந்திலும் பரவிவருவதையடுத்து பலருக்கு அவற்றால் நச்சு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது.

கம்பளிப்பூச்சிகளைக் கண்டால் அவற்றைத் தொடவேண்டாம் என்றும், விலங்குகளையும் அருகில் விடவேண்டாம் என்றும் எனினும் இது தொடர்பில் மிகுந்த அவதானத்தடன் இருக்கும்மாறும் அத்தடன் உள்ளூர் சுகாதார அலுவலர்களை அணுகுமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

இதேவேளை, கடந்த ஆண்டு இந்த கம்பளிப்பூச்சிகளும், அவற்றின் அந்துப்பூச்சிகளாலும் 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...